பூமியை நோக்கி 25,000 கிமீ வேகத்தில் வரும் விண்கற்கள் - நாசா அதிர்ச்சி தகவல்....!

NASA
By Nandhini Jan 02, 2023 09:29 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பூமியை நோக்கி ஒரு மணி நேரத்திற்கு 25,000 கிமீ வேகத்தில் விண்கற்கள் வந்துக்கொண்டிருப்பதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

25,000 கிமீ வேகத்தில் வரும் விண்கற்கள்

இது குறித்து நாசா தெரிவிக்கையில்,

பூமியைச் சுற்றி எண்ணற்ற விண்வெளி கற்கள் சுற்றி வருகின்றன. இந்த சிறுகோளின் பெயர் 2022 YG5.சிறுகோள்கள் 72 அடி நீளம் கொண்டது. ஆனால், தற்போது இந்த சிறுகோள் பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறது.

பூமியை நோக்கி ஒரு மணி நேரத்திற்கு 25,000 கிமீ வேகத்தில் விண்கற்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. பூமியை நோக்கி இந்த சிறுகோள்கள் வந்தாலும், ஆபத்தான தூரத்தை அடைவதற்கு முன்பே அழிக்கப்படும்.

பூமியில் இருந்து ஆபத்தான சிறுகோள்களை திசை திருப்பும் தொழில்நுட்பத்தை உருவாக்க நாசா முயற்சித்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு சிறுகோளை திசை திருப்பும் கருவியான DARTஐ வெற்றிகரமாக சோதித்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

nasa-earth-meteorites-speed-of-25-000-km