செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் விண்கலம்: கண்ணீர் சிந்திய விஞ்ஞானிகள்

twitter nasa Swati Mohan
By Jon Feb 20, 2021 04:20 AM GMT
Report

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததா என்பதை கண்டறிவதற்காக நாசாவின் பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பப்பட்டு பத்திரமாக தரையிறங்கியுள்ளது. கடந்தாண்டு ஜூலை 30-ந்தேதி நாசா அனுப்பிய இந்த விண்கலம் தற்போது தரையிறங்கியுள்ளது, ஆறு சக்கரங்களைக் கொண்ட இந்த பெர்சவரன்ஸ் ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கோளின் பாறைகளைத் துளையிட்டு ஆய்வு செய்யும்.

இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் முன்னாளில் உயிரினங்கள் வாழ்ந்துள்ளனவா என்று தகவல் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் செவ்வாய் கிரகத்தில் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் எடுத்த புகைப்படத்தையும் நாசா டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

பெர்சவரன்ஸ் ரோவர் தன்னோடு ஒரு சிறிய ஹெலிகாப்டரை எடுத்துச் சென்றுள்ளது. விரைவில் செவ்வாய் கோளில் ஹெலிகாப்டர் பறக்க விடும் சோதனை நடைபெறும். இப்படி வேறொரு கோளில் மனிதர்கள் ஹெலிகாப்டரை பறக்கவிட முயற்சிப்பது இதுவே முதல் முறை.

அதன் பிறகு தான் பெர்சவரன்ஸ் ரோவரின் முக்கியப் பணிகள் தொடங்கும் என தெரிகிறது.

இதுகுறித்து நாசாவின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் கூறுகையில்,' அற்புதமான தருணம் அது, இந்த சவாலான சூழ்நிலையில் நம் விஞ்ஞானிகளின் சாதனை பெருமைப்படவைக்கிறது. விண்கலம் தரையிறங்கியதும் ஜோ பைடன் எங்களை தொடர்பு கொண்டு வாழ்த்தியதாக தெரிவித்துள்ளார்.