சுற்றுலா பகுதியில் விபரீதம்: 6 பேர் தண்ணீரில் மூழ்கி மரணம்

Madhya Pradesh
By Fathima May 01, 2026 06:00 AM GMT
Report

நர்மதா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பார்கி அணையில் 30 பயணிகளுடன் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

விடுமுறை தின காலத்தில் குடும்பத்துடன் பலரும் சுற்றுலா செல்வது வழக்கம். அந்த வகையில் ஜபல்பூரில் விடுமுறை கொண்டாட்டம் சோகமாய் முடிந்துள்ளது.

பார்கி அணைக்கு இன்று நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர், 30 பயணிகளுடன் புறப்பட்ட படகு எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்தது.

சுற்றுலா பகுதியில் விபரீதம்: 6 பேர் தண்ணீரில் மூழ்கி மரணம் | Narmada River 6 Dead

உடனடியாக அங்கிருந்த உள்ளூர்வாசிகள் மீட்புப்பணியில் இறங்கினர், தகவலறிந்து விரைந்து வந்த மீட்புபடையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 15 பேர் நீந்தி கரை சேர்ந்த நிலையில், 6 பேர் மரணமடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணையில் அதிகளவான மக்களை ஏற்றியதும், உரிய பாதுகாப்பு கவசங்கள் இல்லாததும் காரணம் என தெரியவந்துள்ளது.

மேலும் அணைப்பகுதியில் பலத்த காற்று வீசியதும் படகு கவிழ காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

சுற்றுலா பகுதியில் விபரீதம்: 6 பேர் தண்ணீரில் மூழ்கி மரணம் | Narmada River 6 Dead