நரிகுறவர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
சென்னை திருமுல்லைவாயலில் நரிகுறவர் இன மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியிலுள்ள 108 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடும்ப அட்டைகளை 20 குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதையடுத்து இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை 39 நபர்களுக்கும் வழங்கினார். முதியோர் உதவித்தொகை 4 நபர்களுக்கும்,
சாலையோர வியாபாரிகளுக்கு நிதியுதவி கடன் தல ரூபாய் 10000, 38 நபர்களுக்கு வழங்கப்படுகிறது. தனி நபர் கழிப்பறை வசதியை மேம்படுத்தி தர மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் முதலமைச்சர் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆவடி பேருந்துநிலையம் அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த மக்களோடு உரையாடுகிறார்.
அந்த பகுதியில் நரிகுறவர் வீட்டுக்கு செல்லும் முதலமைச்சர் அங்கு உணவு உண்கிறார்.