தமிழ்நாடு முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார்

Government of Tamil Nadu Chennai Death
By Thahir Apr 11, 2023 02:19 AM GMT
Report

தமிழ்நாடு முன்னாள் தலைமை தேர்தல் அலுவலர் நரேஷ் குப்தா நேற்று மாலை காலமானார்.

நரேஷ் குப்தா காலமானார்

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தா(73). இவர் சென்னை அண்ணாநகர் மேற்கு ஆபிசர்ஸ் காலனியில் தனது மகனுடன் வசித்து வந்தார்.

தமிழக தேர்தல் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற நரேஷ் குப்தா கடந்த 5-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழ்நாடு முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார் | Naresh Gupta Former Ias Officer Passes Away

உத்தரபிரதேசத்தில் உள்ள அவரது உறவினர்கள் வந்த பின்னர் நாளை அண்ணாநகரில் உள்ள இடுகாட்டில் அவரது இறுதி சடங்கு நடைபெற உள்ளது.