அப்படியே அந்த ஸ்டேடியம் பெயரையும் மாத்துங்க. மோடியை வம்பிழுக்கும் குஜராத் முன்னாள் முதல்வர்!

stadium narendramod khelratnaaward
By Irumporai Aug 06, 2021 01:28 PM GMT
Report

நரேந்திர மோடி பெயரில் உள்ள ஸ்டேடியத்திற்கு சர்தார் படேல் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென குஜராத் முன்னாள் முதல்வர் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறையில்  சாதித்தவர்களுக்கு வழங்கப்படும்  உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுமாற்றப் படுவதாக பிரதமர் மோடி இன்று காலை அறிவிப்பை வெளியிட்டார்.

கேல் ரத்னா விருதிற்கு  தயான் சந்த் பெயரிட வேண்டும் என இந்தியா முழுவதும் பல கோரிக்கைகள் எழுந்ததால் அதை மதித்து கேல் ரத்னா விருது இனிமேல் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என அழைக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

பிரதமரின் இந்த அறிவிப்பிற்கு  காங்கிரஸார் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுவரை ஊர் பெயர்களை மாற்றி வந்த பாஜக அரசு தற்போது விருது பெயர்களையும் மாற்றி வருவதாக காங்கிரஸார் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராஜீவ்காந்தியின் பெயர் மாற்றப்பட்டதற்கு  கண்டனக் குரல்களையும் எழுப்பினர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி பெயர் மாற்றப் பட்டால் பிரதமர் மோடியின் பெயரையும் மாற்ற வேண்டும் என குஜராத் முன்னாள் முதல்வர் ஷங்கர்சிங் வகேலா ட்வீட் செய்துள்ளார்.

அந்தப் பதிவில், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது என்று பிரதமர் மோடி மாற்றியது போல அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தை சர்தார் பட்டேல் ஸ்டேடியம் என மீண்டும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.