70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் சிறுத்தைகள் - குனோ தேசிய பூங்காவில் திறந்து விட்டார் பிரதமர் மோடி...!

Narendra Modi Viral Video
By Nandhini Sep 17, 2022 07:48 AM GMT
Report

நமிபியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்தடைந்த 8 சிறுத்தைகளில் 3 சிறுத்தைகளை பிரதமர் மோடி இன்று குனோ தேசிய பூங்காவில் திறந்துவிட்டார்.

இந்தியாவில் அழிந்து போன சிறுத்தைகள் 

இந்தியாவில் சிறுத்தை இனங்கள் படிப்படியாக அழிந்து வந்தது. சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோரியா பூங்காவில் இருந்த கடைசி சிறுத்தையும், 1948-ம் ஆண்டு இறந்துபோனது.

இதனையடுத்து, இந்தியாவில் சிறுத்தைகள் இனம் அழிந்துவிட்டதாக 1952-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு, இந்தியாவில் கடந்த 74 ஆண்டுகளாக சிறுத்தை இனமே இல்லை.

நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் 

இந்திய பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, இந்தியாவுக்கு சிறுத்தைகளை கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவுடன் இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படி, 5 பெண் மற்றும் 3 ஆண் என 8 சிறுத்தைகளை நமீபியா அரசு இந்தியாவுக்கு நன்கொடையாக வழங்க முன்வந்தது. நமீபியாவிலிருந்து கொண்டு வரப்படும் சிறுத்தைகள் மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் வைத்து பராமரிக்க இந்திய அரசு முடிவு செய்திருந்தது. இதைத் தொடர்ந்து, நம் நாட்டின் தேசிய விலங்கான புலி வடிவில் சிறப்பு விமானம் வடிவமைக்கப்பட்டது. இந்த சிறப்பு விமானம் நேற்று நமீபியா சென்றடைந்தது.

இந்திய மண்ணில் சிறுத்தைகள்

இதனையடுத்து, நமீபியாவிலிருந்து 8 சிறுத்தைகளுடன் சிறப்பு சரக்கு விமானம் B747, இன்று காலை குவாலியர் விமானப்படை நிலையத்தை வந்தடைந்தது. இதனையடுத்து, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் 8 சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டன.

சிறுத்தைகளை திறந்து விட்ட பிரதமர் மோடி

இந்நிலையில், இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட 8 சிறுத்தைகளில் 3 சிறுத்தைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று குனோ தேசிய பூங்காவில் திறந்து விட்டார்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

narendra-modi-viral-video-cheetahs