பிரதமர் மோடிக்கு எப்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்? மத்திய அரசு தகவல்
இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணி கடந்த 16-ம் தேதி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். முதலில் மருத்துவர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் அரசியல்வாதிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் என குரல் எழுந்தது. பிரதமரும் மக்கள் முன்னிலையில் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டு நாட்டு மக்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களுக்கு இரண்டாம் கட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஐம்பது வயதுக்கும் அதிகமான அரசியல்வாதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.