‘வந்தே பாரத்’ விரைவு ரயில் சேவை தொடங்கி வைத்து ஊழியர்களுடன் பயணம் செய்த பிரதமர் மோடி

Narendra Modi Viral Video
By Nandhini 2 மாதங்கள் முன்

குஜராத் மாநிலத்தில் ‘வந்தே பாரத்’ விரைவு ரயில் சேவை தொடங்கி வைத்து, ஊழியர்களுடன் ரயிலில் பிரதமர் மோடி பயணம் செய்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

‘வந்தே பாரத்’ விரைவு ரயில் சேவை

குஜராத் மாநிலம், காந்தி நகர்- மும்பை இடையிலான ‘வந்தே பாரத்’ விரைவு ரயில் சேவை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ‘வந்தே பாரத்’ ரயில்களை உருவாக்குவதில் பணியாற்றிய தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுடன் பிரதமர் உரையாடினார். அப்போது, பிரதமர் மோடியிடம் ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலின் சிறப்பு அம்சங்களை அதிகாரிகள் எடுத்து கூறினர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயில் வேகம், சேவை பாதுகாப்பில் சிறப்பு வாய்ந்தாக உள்ளது என்றனர்.

ஊழியர்களுடன் பிரதமர் மோடி ரயிலில் பயணம்

இதனையடுத்து, குஜராத்தில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி சக ஊழியர்களுடன் ரயிலில் பயணம் செய்தார். தற்போது சமூக வலைத்தளங்களில் இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  

modi