எனது எண்ணங்கள் முழு குடும்பத்துடன் உள்ளது…சோனியா காந்தியின் தாயார் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

Twitter Sonia Gandhi Narendra Modi
By Nandhini Sep 01, 2022 06:25 AM GMT
Report

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தியின் தாயார் மறைவு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோவுக்கு வயது மூப்பு காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு இத்தாலியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 23ம் தேதி பாவ்லா மைனோவை காண சோனியா காந்தி இத்தாலிக்கு சென்றிருந்தார். அவருடன் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இத்தாலிக்கு சென்றனர்.

கடந்த 27ம் தேதி சோனியா காந்தி தாயார் பாவ்லா மைனோ உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் இத்தாலியில் நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

narendra-modi-twitter-sonia-gandhi

பிரதமர் மோடி இரங்கல்

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோவின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், தாயார் பாவ்லா மைனோவை இழந்து வாடும் சோனியா காந்திக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். இந்த துக்கமான நேரத்தில், எனது எண்ணங்கள் முழு குடும்பத்துடன் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.