நன்றி தமிழ்நாடு! நேற்று தமிழ்நாட்டுக்கு வந்ததை மறக்க முடியாது - பிரதமர் மோடி டுவிட்

Narendra Modi
By Nandhini May 27, 2022 11:05 AM GMT
Report

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க நேற்று பிரதமர் மோடி தமிழகம் வந்தார்.

சென்னை விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதன் பின்னர் சாலை மார்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு சென்ற மோடியை தமிழக முதலமைச்சர் சிலப்பதிகாரம் நூலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை வழங்கி வரவேற்றார்.

இதனையடுத்து, விழாவில் மோடி பேசுகையில், ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே , இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே..’ என்ற பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி பேசினார்.

பிரதமர் மோடி, ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தலைசிறந்தவர்களாக உள்ளனர். தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாசாரம் உலகளாவியது. மேலும், சென்னை முதல் கனடா வரை... மதுரை முதல் மலேசியா வரை... நாமக்கல் முதல் நியூயார்க் வரை...சேலம் முதல் தென் ஆப்பிரிக்கா வரை... தமிழ் பரவியுள்ளது என்று உணர்ச்சிப் பொங்க பேசினார்.

இந்நிலையில், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நன்றி தமிழ்நாடு! நேற்று தமிழ்நாட்டுக்கு வந்ததை மறக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.