காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி - தங்கம் வென்ற ஜெரேமி லால்ரினுங்காவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Twitter Narendra Modi
By Nandhini Jul 31, 2022 12:24 PM GMT
Report

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஜெரேமி லால்ரினுங்கா தங்கம் வென்றதையடுத்து, இவருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

காமன்வெல்த் விளையாட்டு

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி, கடந்த 28ம் தேதி, இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி கடந்த 28ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் சுமார் 72 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

இப்போட்டியில், தடகளம், பேட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன. சுமார் 6,500 வீரர்கள் மற்றும் குழு நிர்வாகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

modi - twitter

பிரதமர் மோடி வாழ்த்து

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஜெரேமி லால்ரினுங்கா தங்கம் வென்றுள்ளார். இவருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், சரித்திரம் படைக்கும் நமது யுவசக்தி! வாழ்த்துக்கள்... தனது முதல் CWGஇல் தங்கம் வென்றார் மற்றும் ஒரு அற்புதமான CWG சாதனையையும் படைத்துள்ளார். இளம் வயதிலேயே அவர் மகத்தான பெருமையையும் புகழையும் கொண்டு வந்தார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... என்று பதிவிட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், ஜெரேமி லால்ரினுங்கா மிசோராம் முதலமைச்சர் உட்பட பலர் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.