அமோக ஆதரவு; உலகின் பிரபல தலைவர் மோடிதான் - வெளியான சர்வே!
சர்வதேச தலைவர்களின் பட்டியலில் மோடி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
சர்வதேச தலைவர்கள்
ராஜஸ்தான், மத்தியபிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதில் காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கும் என்றும் யூகங்கள் எழுந்தன.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. இதனால் தற்போது வரை பாஜகவின் கரமே உயர்ந்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மோடி முதலிடம்
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த 'மார்னிங் கன்சல்ட்' என்ற ஆய்வு நிறுவனம் 'சர்வதேச தலைவர்களுக்கான ஒப்புதல் மதிப்பீடு' என்ற கருத்து கணிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி 76% ஒப்புதல் விகிதத்துடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
தொடர்ந்து மெக்சிகோ ஜனாதிபதி அண்ட்ரெஸ் மானுவெல் 66% ஒப்புதல் விகிதத்துடன் 2ஆவது இடத்தில் உள்ளார். சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட் 58% ஒப்புதல் விகிதத்துடன் 3ஆவது இடத்தில் உள்ளார்.
வெறும் 18% மட்டுமே மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதிகபட்ச எதிர்ப்பு என்று பார்த்தால் அது செக் குடியரசுத் தலைவருக்குத் தான்.