கடந்த முறை ஜப்பான் வந்தபோது ஷின்ஜோ அபேவுடன் நீண்டநேரம் உரையாடினேன்.... - பிரதமர் மோடி உருக்கம்

Shinzo Abe Narendra Modi Japan
By Nandhini Sep 27, 2022 05:42 AM GMT
Report

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் மோடி கடந்த முறை ஜப்பான் வந்தபோது ஷின்ஜோ அபேவுடன் நீண்டநேரம் உரையாடினேன் என்று உருக்கமாக பேசியுள்ளார். 

ஷின்ஜோ அபே சுட்டுக்கொலை

ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் ஷின்ஜோ அபே (67). இவர் அங்கு நரா என்ற இடத்தில் கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, டெட்சுய யமகாமி என்பவரால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. ஷின்ஜோ அபேயின் இறுதிச்சடங்கு ஜூலை மாதம் 12-ம் தேதி டோக்கியோவில் நடைபெற்று, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சி டோக்கியோவில் நடத்தப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியா உள்பட பல நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஜப்பான் சென்றடைந்த பிரதமர்

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி, டெல்லியிலிருந்து ஜப்பான் புறப்பட்டு டோக்கியோ நகரை சென்றடைந்தார். ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடியை ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா முறைப்படி வரவேற்பு கொடுத்தார். இதன் பின்பு இருநாட்டு தலைவர்களின் இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது.

narendra-modi-shinzo-abe-japan

பிரதமர் மோடி உருக்கம்

இதுபற்றி பிரதமர் மோடி கூறுகையில், துயரம் நிறைந்த இந்த நேரத்தில் எங்களது இன்றைய சந்திப்பு நடைபெறுகிறது. கடந்த முறை நான் ஜப்பான் நாட்டிற்கு வந்தபோது, முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்ஜோ அபேவுடன் நீண்டநேரம் உரையாடினேன். அவரை இந்தியா இழந்துள்ளது. அவரையும், ஜப்பானையும் நாங்கள் நினைவுகூர்கிறோம் என்று தெரிவித்தார.

இப்பயணத்தில் பிரதமர் மோடி, ஷின்ஜோ அபேயின் மனைவியை சந்தித்து பேச இருக்கிறார். அப்போது, இந்திய மக்களின் சார்பில் அவருக்கு இரங்கலை தெரிவிக்க உள்ளார். 

narendra-modi-shinzo-abe-japan