பிரதமர் மோடி பிறந்தநாள் - 1213 தேநீர் கோப்பைகளால் 5 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட மணற் சிற்பம்...!

Narendra Modi Viral Photos
By Nandhini Sep 17, 2022 05:52 AM GMT
Report

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி 1213 தேநீர் கோப்பைகளால் 5 அடி உயரத்தில் மணற் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

5 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட மணற் சிற்பம்

இந்திய பிரதமர் மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் உட்பட பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒடிசா பூரி கடற்கரையில் 1213 தேநீர் கோப்பைகளால் 5 அடி உயரத்தில் மணற் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

modi