விவசாயிகளின் முதுகெலும்பை மத்திய அரசு உடைத்து விட்டது - ராகுல்காந்தி ஆவேசம்

Rahul Gandhi Narendra Modi
By Nandhini Nov 17, 2022 08:12 AM GMT
Report

விவசாயிகளின் முதுகெலும்பை மத்திய அரசு உடைத்து விட்டது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் பாத யாத்திரை

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.

பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல்காந்தி. ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

ராகுல்காந்திக்கு பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்று வருகின்றனர்.

ராகுல்காந்தி, செல்லும் இடங்களில் நடனம் ஆடியும், பாட்டு பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

வெறுப்பு இல்லாத சமுதாயமாக மாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த யாத்திரையில் இணைந்து வருகிறார்கள்.

narendra-modi-rahul-gandhi-bharat-jodoyatra

ராகுல்காந்தி ஆவேசம்

இந்நிலையில், விவசாயிகளின் முதுகெலும்பை மத்திய அரசு உடைத்து விட்டது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

நேற்று மராட்டியத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில் -

மோடி அரசின் கொள்கைகளால் பொருளாதாரம் சீரழிந்து விட்டது. வேலைவாய்ப்பு இல்லை. மக்கள் மிகவும் திண்டாடுகிறார்கள். விவசாயிகளின் முதுகெலும்பையும் மத்திய அரசு உடைத்து விட்டது என்று பேசினார்.