பிரதமர் மோடியை தமிழக மக்கள் மனதார வரவேற்கின்றனர் - தமிழில் டுவிட் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி
இன்று மத்திய அரசு துறைகள் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட விழா நடைபெறுகின்றது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்திலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வர உள்ளார்.
இன்று மாலை 5.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வருகை தர இருக்கும் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்க உள்ளர்.
இதனையடுத்து, அங்கிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடி வருகையையொட்டி வழியெங்கும் அவருக்கு பா.ஜ.க.வினர் சார்பில் தாரை, தட்டப்பை முழங்க, சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கோடிக்கணக்கான ஏழைகள், விளிம்புநிலை மற்றும் இளைஞர்களுக்கு உதவிய அவரது துணிச்சலான நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்து மனதார வரவேற்கின்றனர் என தமிழில் பதிவிட்டுள்ளார்.
மாண்புமிகு பிரதமர் திரு.@narendramodi அவர்களை கோடிக்கணக்கான ஏழைகள், விளிம்புநிலை மற்றும் இளைஞர்களுக்கு உதவிய அவரது துணிச்சலான நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்து மனதார வரவேற்கின்றனர் . pic.twitter.com/tWT2Vk1t8v
— RAJ BHAVAN,TAMIL NADU (@rajbhavan_tn) May 26, 2022
![சீரழிக்கப்பட்டு தொடருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி : இந்தியாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்](https://cdn.ibcstack.com/article/5ae555cf-86cc-4bea-a140-7c068a23059d/25-67a6422204521-sm.webp)
சீரழிக்கப்பட்டு தொடருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி : இந்தியாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் IBC Tamil
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)
Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன? Manithan
![அரசியல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி அவசியம்...! சுட்டிக்காட்டும் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர்](https://cdn.ibcstack.com/article/a271d428-2b27-40b4-8402-783e23a46fea/25-67a712c8ab08b-sm.webp)