பிரதமரை சந்திக்கும் கூட்டணி கட்சிகள்! - கூட்டணி இறுதியாக வாய்ப்பா?

admk dmk bjp dmdk
By Jon Feb 14, 2021 07:11 AM GMT
Report

பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க இன்று சென்னை வந்துள்ளார். இதற்காக போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலும் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் பிரதமரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளான தேமுதிக, பாமக, தாமாக உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நிகழ்ச்சிக்கு இடையே சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து முடிவெடுக்க வாய்ப்பிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் தொடர்வோம் என பாஜக அறிவித்திருந்த நிலையில் மற்ற கூட்டணி கட்சிகள் தங்களுடைய முடிவை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.