99 வயதில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிரதமர் மோடியின் தாய்
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் 1 முதல் 65 வயதிற்கும் அதிகமானவர்களுக்கும், உடல் குறைபாடு உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியது. இந்தியாவில் தற்போது 2 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பல முக்கிய அரசியல்வாதிகளும் திரை பிரபலங்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆரம்பித்தனர்.
தற்போது பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். அவருக்கு தற்போது 99 வயதாகிறது.
Happy to share that my mother has taken the first dose of the COVID-19 vaccine today. I urge everyone to help and motivate people around you who are eligible to take the vaccine.
— Narendra Modi (@narendramodi) March 11, 2021
இந்த செய்தியை பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் மக்கள் அனைவரும் தயக்கமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.