முப்படை தளபதி மறைவை தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

narendra modi helicopter crash meets defence team bipin rawat dies indian cds
By Swetha Subash Dec 08, 2021 02:35 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே, காட்டேரி மலைப்பகுதில் ராணுவ ஹெலிகாப்டர் வானில் பறந்துக் கொண்டிருந்த போது, பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.

முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 முக்கிய விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்த நிலையில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதில் ஒரு வீரர் மட்டும் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள டுவீட்டில், ‘துரதிர்ஷ்டவசமான இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவில் மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்தனர்’என தெறிவித்திருக்கிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் மற்ற விமானப்படை வீரர்களுக்கு நாளை டெல்லியில் இறுதி மரியாதை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 பிபின் ராவத் மரணம் அடைந்த நிலையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.