காந்திஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பருத்தித் துணியை வாங்குங்கள்... - பிரதமர் மோடி வேண்டுகோள்

Mahatma Gandhi Narendra Modi
By Nandhini 1 மாதம் முன்

மகாத்மா காந்திஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கையால் நெசவு செய்யப்பட்ட பருத்தித் துணியை வாங்குங்கள் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காந்தி ஜெயந்தி

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மலர் தூவி பிரதமர் மோடி அஞ்சலி

இந்நிலையில், இன்று காலை பிரதமர் மோடி விஜய்காட்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி ஜி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, , தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாளையொட்டி, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.

Mahatma Gandhi - modi

பிரதமர் மோடி வேண்டுகோள்

இதனையடுத்து, மகாத்மா காந்திஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கையால் நெசவு செய்யப்பட்ட பருத்தித் துணியை வாங்குங்கள் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அவரது இலட்சியங்கள் உலகளவில் எதிரொலிக்கின்றன மற்றும் அவரது எண்ணங்கள் மில்லியன் கணக்கான மக்களுக்கு பலத்தை வழங்கியுள்ளன. இந்த காந்தி ஜெயந்தி இன்னும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்தியா ஆசாதி கா அம்ரித் மஹோத்சவைக் குறிக்கிறது. பாபுவின் கொள்கைகளை நாம் எப்போதும் கடைப்பிடிப்போம். காந்திஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காதி (கதர் ஆடை) மற்றும் கைவினைப் பொருட்களை வாங்குமாறும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.