இந்தியாவின் நீண்ட கால பிரதமர்.., சாதனை படைத்த நரேந்திர மோடி
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு நாடு சுதந்திரம் அடைத்த பின் 16 ஆண்டுகள் 286 நாட்கள் பிரதமராகப் பதவி வகித்தார்.
1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலுக்குப் பிறகு நேரு தொடர்ந்து 4398 நாட்கள் பிரதமராக இருந்தது சாதனையாகக் கருதப்பட்டது.
இந்நிலையில், இந்த சாதனையை முறியடித்து அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர் என்ற புதிய சாதனையை நரேந்திர மோடி இன்று படைத்துள்ளார்.

2014ஆம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்ற மோடி 2019 மற்றும் 2024 பொதுத்தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சியில் நீடித்து வருகிறார்.
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசு 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் இச்சாதனை நிகழ்ந்துள்ளது.
जनसेवा ही सुशासन की सबसे बड़ी कसौटी है। विनम्रता, समर्पण और कर्तव्यनिष्ठा के साथ निरंतर कार्य करने वाला व्यक्ति ही जनविश्वास अर्जित करता है।
— Narendra Modi (@narendramodi) June 10, 2026
सदानुरक्तप्रकृतिः प्रजापालनतत्परः।
विनीतात्मा हि नृपतिर्भूयसी श्रियमश्नुते॥ pic.twitter.com/mn0Ax0F8hs
இதுகுறித்து மோடி "மக்களுக்கு சேவை செய்வதே நல்லாட்சியின் உண்மையான அளவுகோல். பணிவு, அர்ப்பணிப்பு மற்றும் கடமை உணர்வுடன் செயல்படுபவர்களே மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்" என்று தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சாதனையைக் கொண்டாடும் வகையில், டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் NDA கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.