இன்று மட்டும் 1,65,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி- மத்திய சுகாதாரத்துறை

pfizer virus helath
By Kanagasooriyam Jan 18, 2021 03:18 PM GMT
Kanagasooriyam

Kanagasooriyam

in இந்தியா
Report

கொரோனாவுக்கு எதிரான உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள யாரும் வற்புறுத்தப்பட மாட்டார்கள் என்றும் தாமாக முன்வருபவர்களுக்குப் போடப்படும் எனவும் மத்திய அரசு கூறியிருந்தது.

அதன்படி முதற்கட்டமாக கொரோனா தடுப்பில் முன்கள வீரர்களாச் செயல்படும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் மனிஷ் குமார் (34) என்பவர், இந்தியாவிலேயே முதன்முறையாக தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் நாடு முழுவதும் முதல் நாளில் 1,65,714 முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஆந்திராவில் 16 ஆயிரத்து 963 பேருக்கும் பீகாரில் 16,401 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் இன்று 2,783 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடபட்டது.