கொச்சியில் ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி...!

Narendra Modi Kerala
By Nandhini Sep 02, 2022 05:24 AM GMT
Report

கேரளா, கொச்சியில் ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்துள்ளார்.

பிரதமர் மோடி கேரள பயணம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று 2 நாட்கள் சுற்றுப் பயணமாக கேரளா சென்றுள்ளார். இதனையொட்டி கேரளாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார்

நேற்று மாலை கேரளா மாநிலம், கொச்சிக்கு வருகை தந்த நரேந்திர மோடி கொச்சி மெட்ரோ ரயிலின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக உள்ள, பேட்டா முதல் எஸ்என் சந்திப்பு வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். கோட்டயம்-எர்ணாகுளம் மற்றும் கொல்லம்-புனலூர் இடையே சிறப்பு ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து 76 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட கொல்லம்-புனலூர் இடையே புதிதாக மின்மயமாக்கப்பட்ட பகுதியை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், கொச்சி மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோர் பங்கேற்றனர். இதன் பின்பு, நரேந்திர மோடி கேரள ஆதிசங்கரர் அவதரித்த காலடி கிராமத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

modi

ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

இந்நிலையில், கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட, விமானம் தாங்கி போர்க் கப்பலான, ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய கடற்படைக்கு புதிய கொடியையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த புதிய போர்க்கப்பல் தற்போதுள்ள கப்பல்களை விட 7 மடங்கு பெரியதாகும்.

மங்களூர் பயணம்

இதனையடுத்து நாளை மதியம் கர்நாடகா மாநிலம் மங்களூரு செல்கிறார். அந்த மாநிலத்தில் 3,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்க உள்ளார். கேரளாவில் பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.