பிரதமர் மோடி என் கடிதங்களுக்கு பதிலளிக்கவே இல்லை - கமல்ஹாசன் ஆதங்கம்
மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவுற்றன. அதன் நான்காம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் அதன் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “எம்ஜிஆரை நான் முதல்வராக பார்க்கவில்லை. அண்ணனாகத்தான் பார்த்தேன் பிரதமர் மோடிக்கு நான் 7 முறை கடிதம் எழுதியும் அவர் ஒருமுறை கூட பார்க்கவில்லை” என்றார்.
மேலும், “பசு மாட்டுக்கு கிடைக்கும் மரியாதை கூட தமிழனுக்கு கிடைக்கவில்லை. நான் சொல்வதெல்லாம் பதிவாக வேண்டும்; செயல் ஆக வேண்டும் என்பதே என் ஆசை” என்றார். மக்கள் நீதி மையம் கட்சிக்கு இன்று நான்காம் ஆண்டு தொடக்க விழா. இந்த தொடக்க விழாவை மிகப்பெரிய மாநாடாக நடத்த கமல்ஹாசன் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் காவல்துறையின் அனுமதி கிடைக்காததால் தேர்தல் மாநாட்டினை வரும் மார்ச் மாதம் 7-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார். அதனால் தொடக்க விழாவினை சென்னை தாம்பரத்தில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார்.
இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் இக்கூட்டத்தில் நடைபெற்றது. பின்னர் கூட்டத்தில் பேசிய கமலஹாசன், பிரதமர் மோடிக்கு தான் ஏழு முறை கடிதம் எழுதியதாகவும், அவர் ஒருமுறை கூட பார்க்கவே இல்லை என்று விரக்தியை வெளிப்படுத்தினார்.