எரிசக்தி விநியோகத்தில் எந்தத் தடையும் இருக்கக்கூடாது - 17வது ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

Narendra Modi
By Nandhini Nov 15, 2022 05:33 AM GMT
Report

எரிசக்தி விநியோகத்தில் எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்று நடைபெற்று வரும் 17வது ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஜி20 நாடுகளின் 17வது உச்சி மாநாடு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நாட்டின் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய 3 முக்கிய அமர்வுகளில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

இது தவிர உலக நாடுகளின் பொருளாதாரம், எரிசக்தி சுற்றுசூழல், பாதுகாப்பு ஆகியவை குறித்தும் மற்ற நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி விவாதிக்க உள்ளார்.

17வது ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பாலி சென்ற பிரதமர் மோடிக்கு இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உற்சாக வரவேற்பு கொடுத்தார். இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். 

narendra-modi-g20balisummit

பிரதமர் மோடி பேச்சு

இந்நிலையில், இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது -

எரிசக்தி விநியோகத்தில் எந்தத் தடையும் இருக்கக்கூடாது. எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். உலக வளர்ச்சிக்கு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பும் முக்கியமானது.

இன்றைய உரத் தட்டுப்பாடு நாளைய உணவு நெருக்கடியாகும். இதற்கு உலகம் தீர்வு காணாது. உரங்கள் மற்றும் உணவு தானியங்கள் இரண்டின் விநியோகச் சங்கிலியையும் நிலையானதாகவும் உறுதியுடனும் வைத்திருக்க பரஸ்பர ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.