சர்ச்சை கருத்து: காங்கிரசுடன் உறவை முறிக்க மு.க.ஸ்டாலின் தயாரா? பிரதமர் மோடி சவால்!

M. K. Stalin Narendra Modi India Lok Sabha Election 2024
By Jiyath May 08, 2024 01:04 PM GMT
Report

தமிழர் பெருமையை காக்க காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக்கொள்ள மு.க.ஸ்டாலின் தயாரா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். 

சர்ச்சை கருத்து      

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார். அதில் "இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் சீனர்கள் போலவும், மேற்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் அரேபியர்கள் போலவும்,

சர்ச்சை கருத்து: காங்கிரசுடன் உறவை முறிக்க மு.க.ஸ்டாலின் தயாரா? பிரதமர் மோடி சவால்! | Narendra Modi Challenges Mk Stalin

வடக்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் ஆப்பிரிக்கர்கள் போலவும் உள்ளனர். ஆனாலும் நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள்" என்று பேசினார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக வைத்துள்ளது.

பிரதமர் சவால் 

இந்நிலையில் சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆந்திராவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி "நிறத்தின் அடிப்படையில் அவமானப்படுத்துவதை நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

சர்ச்சை கருத்து: காங்கிரசுடன் உறவை முறிக்க மு.க.ஸ்டாலின் தயாரா? பிரதமர் மோடி சவால்! | Narendra Modi Challenges Mk Stalin

தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல இருப்பதாக சாம் பிட்ரோடா கூறியிருக்கிறார். எனவே, தமிழர் பெருமையை காக்க காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா? கூட்டணியை முறிக்க அவருக்கு துணிச்சல் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.