அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு
ஜன. 30-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஜன. 29-ம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் முதல்கட்டமாக 15-ம் தேதி வரையிலும், 2-ம் கட்டமாக மார்ச் 1-ம் தேதி வரையிலும் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகளால் மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெற உள்ளது. மாநிலங்களவை கூட்டம் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் கேள்விநேரம் மற்றும் பூஜ்ஜியம் நேர விவாதத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.பி.க்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். வரும் 30-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.இதேபோல் அன்றைய தினம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டமும் நடைபெற உள்ளது.
Prime Minister Narendra Modi to chair an all-party meeting, that has been called on 30th January ahead of Budget Session of the Parliament. The meeting will be held via video-conferencing. pic.twitter.com/TuozDSOhXz
— ANI (@ANI) January 20, 2021