நான் நரேந்திர மோடி இல்லை, ஏனென்றால் நான் பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி
தமிழகத்தோடு சேர்த்து அஸ்ஸாம் மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு காங்கிரஸ் - பாஜக கூட்டணி தேர்தலைச் சந்திக்கின்றன. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி ஆகியோர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக அஸ்ஸாம் சென்றுள்ளார். அப்போது பொதுக் கூட்டடத்தில் பேசிய அவர், “நான் நரேந்திர மோடி இல்லை. நான் பொய் சொல்ல மாட்டேன். காங்கிரஸ் கட்சி சொல்வதை செய்யும். அஸ்ஸாம் மக்களுக்கு மிக முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை அளிக்கிறோம்.
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.367 ஊதியமாக வழங்கப்படும், இல்லத்தரசிகளுக்கு ரூ.2000 உதவித் தொகை வழங்கப்படும், ஐந்து லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் சிஏஏ சட்டம் நிராகரிக்கபப்டும், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜக அஸ்ஸாமின் வளர்ச்சியை பின்னுக்கு தள்ளிவிட்டது. மதத்தை வைத்து மக்கள் மத்தியில் பிளவை உருவாக்குகிறது” என்றார்.