இன்று நாடாளுமன்ற கூட்டம் - அனைத்து எம்.பிக்களும் சிந்தித்து விவாதங்களில் ஈடுபட வேண்டும் - பிரதமர் மோடி

Narendra Modi
By Nandhini Jul 18, 2022 06:23 AM GMT
Report

குடியரசுத் தலைவர்  தேர்தல்

நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.

Narendra Modi

அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர்.

பிரதமர் மோடி பேட்டி

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகம் சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று நடக்கும் நாடாளுமன்ற கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறலாம். ஆனால் முடிவுகள் முக்கியமானதாக இருக்க வேண்டும். சுமூகமான முறையில் ஆக்கப்பூர்வ விவாதங்கள் நடக்க வேண்டும். இந்த கூட்டத்தொடர் பயனுள்ளதாக இருக்கும் என நான் நம்புகிறேன். அனைத்து எம்.பிக்களும் சிந்திந்து விவாதங்களை மேற்கொண்டு அமர்வை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்றார்.