மு.க.ஸ்டாலினை விமர்சிக்க, அண்ணாமலைக்கு அருகதை இல்லை : நாராயணசாமி
தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காத நிலையில் அதைப் பெற்றுத் தர துப்பு இல்லாத பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வரை பற்றி குறை கூற அருகதை இல்லை என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
நாராயணசாமி விமர்சனம்
நாகையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி,நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி கூறுகையில்.
தமிழகமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தமிழக அரசை கண்டித்து அரசியல் தெரியாத அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபடுகிறார்.
அருகதை இல்லை
தமிழகத்துக்கு உரிய நிதியை பெற்றுத்தர துப்பு இல்லாத பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தமிழக அரசை குறை கூற அருகதை இல்லை என கூறினார்.
மேலும், புதுச்சேரியில் தற்போது பொம்மை முதலமைச்சராக ரெங்கசாமி உள்ளார். சூப்பர் முதலமைச்சராக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செயல்படுவதாக என விமர்சித்தார்.