புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது
திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் புதுச்சேரி மாநிலத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது. திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் திமுக தரப்பில் ஜகதரட்சகன் எம்.பி., புதுச்சேரி தரப்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, புதுச்சேரியில் திமுகவுக்கு 13 தொகுதிகளும், காங்கிரசுக்கு 15 தொகுதிகளும், கூட்டணி கட்சிகளுக்கு(இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க.) 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.