ஓசி பஸ்ல போறீங்க'னு சொன்னவருக்கு இனி சிறையில் ‘ஓசி’ உணவு- விளாசும் பாஜக..!!

Tamil nadu DMK BJP K. Ponmudy Madras High Court
By Karthick Dec 19, 2023 05:47 PM GMT
Report

அமைச்சர் பொன்முடிக்கான தண்டனையை வரும் 21-ஆம் தேதி சென்னை உய்ரநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொன்முடி வழக்கு

கடந்த 1996-2001-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து தற்போதைய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சுமார் 1.36 கோடி ரூபாய் சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

narayanan-tirupathi-welcomes-hc-on-ponmudy-verdict

இந்த வழக்கில், கடந்த ஜூன் மாதம் வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டிருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவித்தது தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து தாமாக முன்வந்து இந்த வழக்கில் விசாரணையை துவங்கிய உயர்நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

narayanan-tirupathi-welcomes-hc-on-ponmudy-verdict

பொன்முடிக்கு அளிக்கப்பட்ட விடுதலையை ரத்து செய்த நீதிமன்றம் அவருக்கான தண்டனை வரும் 21-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், தான் இது குறித்து தமிழக பாஜகவின் துணை தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார்.

ஊழல்வாதிகள் ஒழியட்டும்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என அறிவித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு மகத்தானது. தமிழகத்தின் உய‌ர் கல்வி துறை அமைச்சர் என்ற பொறுப்பில் இது நாள் வரை கோலோச்சிக் கொண்டு, அதிகார துஷ்பிரயோகம் செய்து மக்களை கொள்ளையடித்து கொண்டிருந்த நிலையில், இன்றைய தீர்ப்பு திராவிட மாடலுக்கு கிடைத்த சம்மட்டி அடி.

narayanan-tirupathi-welcomes-hc-on-ponmudy-verdict 

மக்கள் பணத்தில் மாளிகை கட்ட நினைத்தால், சிறைச்சாலைக்கு தான் செல்ல வேண்டும் என்பதை இந்த தீர்ப்பு உணர்த்தியுள்ளது. தொடர்ந்து ஏழை,எளிய மக்களை கிண்டல், கேலி செய்து வந்தவரை இந்த தீர்ப்பு மாற்ற வேண்டும். 'ஓசி, ஓசி' பஸ்ல போறீங்க என சொன்னவருக்கு இனி சிறையில் வழங்கும் உணவே 'ஓசி' தான் என்று நினைத்து பார்க்கட்டும். ஊழல்வாதிகள் ஒழியட்டும். நேர்மையாளர்கள் நிமிரட்டும் என்று பதிவிட்டுள்ளார்.