படிப்பு மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது சிதம்பரம்... மாஸாக வெளியானது அசுரன் தெலுங்கு ரீமேக் ட்ரைலர்
தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகியுள்ள நாரப்பா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
தமிழில் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது
பூமணியின் வெக்கை நாவலின் கருவை மக்கள் மனதில் ஆழமாக பதிவு செய்தார் வெற்றிமாறன்.
தமிழ்நாட்டில் நடந்த சாதிய கொடுமைகளை அழுத்தமாக பதிவு செய்திருந்தது அசுரன்.
இந்நிலையில் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் அசுரன் திரைப்படம் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
நடிகை பிரியாமணி மஞ்சிமா மோகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இறுதி கட்ட பணிகளை நிறைவடைந்துள்ள நாரப்பா படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
தனுஷ் காட்டிய அதே வெறித்தனதை வெங்கடேஷ் நடிப்பிலும் பார்க்க முடிகிறது. அசுரன் கொடுத்த அதே அழுத்தத்தை கொடுக்குமா என்பதைப் படம் வெளியானால் தான் சொல்ல முடியும்.
நாரப்பா திரைப்படம் வரும் ஜுவாலை 20-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது.