திருமணமான 3 மாதத்தில்..நெப்போலியன் வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துகள்!
நெப்போலியன் வீட்டில் விசேஷசத்தால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நெப்போலியன்
தமிழ் சினிமாவின் 80, 90 களின் காலகட்டத்தில் சரத்குமார், ரஜினிகாந்த்,கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை அமைத்துக் கொண்ட வர் நெப்போலியன்.
அதன்பிறகு அரசியலில் களமிறங்கிய நெப்போலியன் திமுக ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராகவும் இருந்தார்.இவருக்குச் சுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
அவரது மூத்த மகன் தனுஷ் சிறுவயதில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதால் சினிமா மற்றும் அரசியலை விட்டுவிட்டு குடும்பத்துடன் அமெரிக்காவிற்குச் சென்றார்.இந்த நிலையில் அமெரிக்காவில் நடிகர் நெப்போலியன் மென்பொருள் நிறுவனம் ஒன்றைச் சொந்தமாக நடத்தி வருகிறார்.
வீட்டில் விசேஷம்
அதில் அவரது மூத்த மகன் தனுஷ் முக்கியப் பொறுப்பில் உள்ளார்.இதனையடுத்து கடந்த வருடம் நவம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுக்கும் தனுஷ்க்கும் ஜப்பானில் பிரமாண்டமாகத் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நெப்போலியன் வீட்டில் விசேஷம் ஒன்று நடந்துள்ளது. அதாவது மகன்கள், மருமகள், மனைவி என நெப்போலியன் குடும்பம் தற்போது மலேசியாவில் வசித்து வருகிறது.
இந்த சூழலில் திருமணம் முடிந்து மூன்று மாதங்களான நிலையில் தனுஷ் - அக்ஷயா தம்பதியின் திருமண ரிசப்ஷனை மலேசியாவின் இரட்டை கோபுரத்தில் வைத்து பிரமாண்டமாக நடத்தியிருக்கிறார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.