தற்கொலை செய்துக்கொண்ட தாய்... காமெடி நடிகரின் வாழ்க்கையி்ல் நடந்த சோகம்

By Petchi Avudaiappan May 18, 2022 07:09 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகளில் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கலைஞர்களில் ஒருவரான நாஞ்சில் விஜயனின் வாழ்க்கையில் நடந்த சோக சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

வித்தியாசமான உடல்மொழி, மிமிக்கிரி குரல் போன்றவற்றால் கலக்கப்போவது யாரு, அது எது இது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் தனது முத்திரையைப் பதித்தவர் நாஞ்சில் விஜயன். பலரையும் சிரிக்க வைத்த இவரது வாழ்வில் நடைபெற்ற சோக சம்பவம் சமீபத்தில் அவரின் நேர்காணல் ஒன்றின் மூலம் வெளிவந்துள்ளது. 

அதில் தான் சிறுவயதில் சந்தித்த வேதனையான சம்பவத்துக்கு முன் இப்போது எதிர்கொள்ளும் அவமானங்களோ, சோதனைகளோ பெரிய விஷயமாக தனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார். நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்த நான் சிறுவயதிலேயே அம்மாவை இழந்து விட்டேன்.  என் கண்முன்னேயே அம்மா தற்கொலை செய்து கொண்டார்.

அவரது கருகிய உடலை வாழை இலையில் சுற்றி என் கைகளில் ஏந்தி ஆட்டோவில் கொண்டு சென்றேன். இதை விட ஒரு மனிதனுக்கு என்ன பெரிய வேதனை இருந்து விடப் போகிறது? அதனால் தற்போது வரும் எந்த ஒரு சோகத்தையும் நான் எளிதில் கடந்து செல்கிறேன் என தெரிவித்துள்ளார். 

நாஞ்சில் விஜயன் தற்போது சீரியல், வெப்சீரிஸ், திரைப்படங்கள் என கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.