திருநங்கையை சகோதரியாகதான் பார்த்தேன் - ஷாக் கொடுத்த நாஞ்சில் விஜயன்

Nanjil Vijayan
By Sumathi Sep 11, 2025 04:18 PM GMT
Report

புகாரளித்துள்ள திருநங்கையை சகோதரியாகவே பார்த்ததாக நாஞ்சில் விஜயன் தெரிவித்துள்ளார்.

திருநங்கை புகார்

திருநங்கை வைஷூ என்பவர், விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன் கூட மனைவியா நான் வாழ்ந்திருக்கேன். 5 வருடமாக பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு என்னை ஏமாற்றிவிட்டார் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

nanjil vijayan

மேலும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள நாஞ்சில் விஜயன், எனக்கும் வைஷுவிற்கு எந்த ஒரு தொடர்பும் கிடையாது, நான் அவரை ஒரு சகோதரி போல் பார்த்தேன்.

பிரபல கிரிக்கெட் வீரருடன் காதலில் பூஜா ஹெக்டே? அவரே சொன்ன தகவல்!

பிரபல கிரிக்கெட் வீரருடன் காதலில் பூஜா ஹெக்டே? அவரே சொன்ன தகவல்!

நாஞ்சில் விஜயன் விளக்கம்

ஆனால் என் மீது வைஷூ அவதூறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார். ஒரு வேளை நான் உங்களை திருமணம் செய்து கொண்டால் கூட உங்களை கடந்துபோன ஆண்கள் எல்லோரும் என்னிடம் வந்து என் பொண்டாட்டியை எப்படி கல்யாணம் பண்ணலாம்னு கேட்பார்களே?

திருநங்கையை சகோதரியாகதான் பார்த்தேன் - ஷாக் கொடுத்த நாஞ்சில் விஜயன் | Nanjil Vijayan Expalin About Transgender Complaint

எனக்கு இப்போது உங்களை பார்க்கும்போது உங்களை கைடு பண்ண ஆள் இல்லையோ, நீங்க டிப்ரஷன்ல இருக்கீங்களோன்னு தான் தோணுது எனக் கூறியுள்ளார்.

திருநங்கை புகாரால் வெளியே தலை காட்ட முடியவில்லை என்றும் நாஞ்சில் விஜயன் மனைவியும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.