‛ஒரு மணியிடமே இத்தனை மணிகளா...’ நாஞ்சில் சம்பத் டுவிட்!

Twitter Nanjil Sampath
By Thahir Aug 11, 2021 06:46 AM GMT
Report

பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தின் டுவிட்டர் பதிவாள் நெட்டிசன்கள் இடையே இணையதளங்களில் தீவிரமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

‛ஒரு மணியிடமே இத்தனை மணிகளா...’ நாஞ்சில் சம்பத் டுவிட்! | Nanjil Sampath Twitter

சிறந்த பேச்சாளரான நாஞ்சில் சம்பத் அரசியல் தொடர்பான கருத்துக்களை எப்போதாவது பதிவிடுவார். அவ்வாறு அவர் பதிவிடும் போது, அது பெரிய அளவில் பேசப்படும். அல்லது விமர்சிக்கப்படும். சில நேரத்தில் கொண்டாடப்படும். அந்த வரிசையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அலுவலகம் மற்றும் அவரது நெருக்கமானவர்களிடத்தில் நடந்த ரெய்டு தொடர்பாக நாஞ்சில் சம்பத் பதிவிட்டுள்ள பதிவு, தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சற்று முன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த பதிவை பதிவு செய்துள்ளார்.

அதில், ‛ஒரு மணியிடமே இத்தனை மணிகளா.. அப்படியானால் மற்ற மணிகளிடமும் சாமிகளிடமும் எத்தனை எத்தனை கோடியோ.! நினைத்தாலே நெஞ்சில் நிலநடுக்கம் ஏற்படுகிறது.!’ என அந்த பதிவில் நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டுள்ளார்.