விஜய் பேசினால் இலங்கையில் அதிரும்; நாஞ்சில் சம்பத்

Nanjil Sampath
By Fathima Mar 02, 2026 05:38 AM GMT
Report

கட்சத்தீவை மீட்க வேண்டும் என தலைவர் விஜய் கூறினால் இலங்கையில் அதிருகிறது என நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார்.

புதுக்கோட்டையில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பேசுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், திமுக என்ற கட்சி நவீன ரக ஒட்டுண்ணிகளின் கொள்ளிடமாக மாறிவிட்டது.

கட்சிக்காக உழைத்தவர்களை தூக்கியெறிந்து விடுகின்றனர், கட்சியின் பெயரை அண்ணா திமுக 2 என மாற்றிக்கொள்ளலாம்.

விஜய் பேசினால் இலங்கையில் அதிரும்; நாஞ்சில் சம்பத் | Nanjil Sampath Speech In Tvk Meeting

இலங்கையில் அதிரும்

தமிழ்நாட்டு மக்களின் கடைசி நம்பிக்கை விஜய், அவரால் தான் சீர்திருத்தத்தை கொண்டுவர முடியும்.

கட்சத்தீவை மீட்போம் என ஸ்டாலின் பேசுகிறார், வைகோ பேசுகிறார், எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

ஆனால் தலைவர் விஜய் ஒரு வார்த்தை சொன்னதும் இலங்கையில் அதிருகிறது, உடனே வெளியுறவுத்துறை அமைச்சர் விஜய் கட்சத்தீவை பற்றி பேசலாமா என்று கேள்வி எழுப்புகிறார்.

என் தலைவன் பேச ஆரம்பித்தால், இலங்கையில் கூட பூகம்பம் ஏற்படுகிறது என தெரிவித்தார்.

வெற்றிவேல் என கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி! என்ன பேசினார்?

வெற்றிவேல் என கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி! என்ன பேசினார்?


கொள்கை தலைவராக பெண்

எனது 39 ஆண்டுகால அரசியலில் எந்த கட்சியினரும் ஒரு பெண்ணை கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்டதில்லை, கொள்கை தலைவராக வேலு நாச்சியாரை நாங்கள் முன்மொழிகிறோம், தமிழ்நாட்டில் இந்த அதிசயத்தை செய்தது விஜய் தான்.

எங்கள் தலைவர் பேசத் தொடங்கியதும் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு ராணி வேலுநாச்சியாரை பற்றி மக்களுக்கு தெரிகிறது.

மதுரையில் அரசு விழாவில் ஒரு மேம்பாலத்திற்கு ராணி வேலுநாச்சியார் மேம்பாலம் என முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டுகிறார்.

பெயர் சூட்ட காரணமாக இருந்தது எதிர்கால முதலமைச்சர் தலைவர் விஜய் என தெரிவித்துள்ளார்.

விஜய் பேசினால் இலங்கையில் அதிரும்; நாஞ்சில் சம்பத் | Nanjil Sampath Speech In Tvk Meeting