தம்பி விஜய் சொன்னதை கேட்டு மெய் சிலிர்த்துட்டேன் - நாஞ்சில் சம்பத்

Vijay Tamil nadu Nanjil Sampath Thamizhaga Vetri Kazhagam
By Sumathi Dec 05, 2025 01:39 PM GMT
Report

தம்பி விஜய் சொன்னதை கேட்டு மெய் சிலிர்த்துவிட்டதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

நாஞ்சில் சம்பத் 

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக என்னை திட்டமிட்டு நிராகரித்தது.

nanjil sampath - vijay

விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தேன், என்னை கண்டதும் `நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன்' என விஜய் கூறினார். நான் மெய் சிலிர்த்து போனேன். தம்பி விஜய் என்னுடைய திசையை தீர்மானித்திருக்கிறார்.

விஜய் சரியான பாதையில் பயணிக்கிறார் என தந்தி டிவியில் பேசிய பிறகு என் மீது வசைப்பாடுகள் அதிகமாகின. தவெகவில் இணைந்து விஜய்யை சந்தித்த தருணத்திலிருந்து புதிதாக பிறந்தது போல உணருகிறேன். நாடு முழுவதும் பரப்புரை செய்ய விஜய் எனக்கு அனுமதி கொடுத்துள்ளார்.

நேத்து ஆரம்பிச்சு இன்னைக்கே முதல்வர் ஆக ஆசை - சாடிய உதயநிதி

நேத்து ஆரம்பிச்சு இன்னைக்கே முதல்வர் ஆக ஆசை - சாடிய உதயநிதி

தவெக பிரசாரம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் விஜய் அமைதி காப்பது ஒருவகையில் நல்லதுதான். மல்லை சத்யாவின் புதிய கட்சியில் இருந்து வந்த அழைப்பை தனிப்பட்ட காரணத்திற்காக நிராகரித்து விட்டேன். தமிழகத்தில் இளைஞர்களை அதிகம் வைத்துள்ள கட்சி தவெக.

தம்பி விஜய் சொன்னதை கேட்டு மெய் சிலிர்த்துட்டேன் - நாஞ்சில் சம்பத் | Nanjil Sampath Join Tvk Apeak About Vijay

இந்த இளைஞர்களை வைத்து தமிழகத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருவார் என விஜய் நம்புகிறார். தமிழ்நாடு முழுவதும் பாசறை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று விஜய்யிடம் கூறினேன்.

தவெகவில் பதவியை விட பிரச்சாரம் செய்ய என்னை அனுப்பினாலே அதை நான் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்