நாஞ்சில் சம்பத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு : மருத்துவமனையில் அனுமதி
DMK
Nanjil Sampath
By Irumporai
தமிழகத்தின் பிரபல அரசியல் பேச்சாளரான நாஞ்சில் சம்பத் உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாஞ்சில் சம்பத்
திராவிட இயக்கத்தின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தற்போது திமுகவில் இணைந்துள்ளார், அதற்கு முன்பு அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட சில கட்சிகளில் இருந்தார்.
உடல்நலக் குறைவு
இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் உடல்நிலை குறைவுகாரணமாக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது நாஞ்சில் சம்பத் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.