‘ஊ சொல்றியா’, ’ஆலுமா டோலுமா’ இதெல்லாம் என்ன பாட்டு - சட்டசபையில் கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன்

TNAssembly tamilculture NainarNagendran OOsolriya AalumaDoluma
By Swetha Subash Apr 19, 2022 11:03 AM GMT
Report

ஊ சொல்லவா, ஆலுமா டோலுமா போன்ற பாடல்களை சுட்டிக்காட்டி, இதுபோன்ற சூழலில் நமது தொன்மையான பண்பாட்டை பேணிக்காக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய சட்டப்பேரவையில் தொழிற்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நகேந்திரன், தற்போது பிரபலமாக உள்ள ஊ சொல்லவா? என்பதெல்லாம் என்ன பாடல் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், இதுபோன்ற பாடல் வரிகளால் 50 வருடங்களுக்கு பின்னால் வருவோர், இதுதான் நம் கலாசாரம் என எண்ணிவிடமாட்டார்களா என்றும், இப்போது வரும் ஆலுமா டோலுமா போன்ற பாடல் வரிகளை புரிந்துகொள்வதற்கு இந்தி படித்துவிட்டா அர்த்தம் தேடமுடியும்? என்றார்.

எனவே இதுபோன்ற சூழலில், நமது தொன்மையான பண்பாட்டை நாம் போற்றிப் பேணிக்காக்க வேண்டும் என்றும் நயினார் நகேந்திரேன் வலியுறுத்தினார்.

முன்னதாக பேசிய நயினார் நகேந்திரன், மாணவர்களிடம் என்ன திறன் உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் வகையில் அவர்களை வழி நடத்திட வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், என் மனைவி ஒரு சேலை, ஜாக்கெட் தைப்பதற்கு 1,700 ரூபாயை கட்டணமாக வாங்கிவிட்டார்கள் என்றும், தையல் கலையையெல்லாம் ஏன் ஒரு படிப்பாக கொண்டுவந்து, வேலைவாய்ப்பை ஏன் உருவாக்கித் தரக்கூடாது? என்றும் கேள்வி எழுப்பினார்.