மார்பக வரி கேட்டதால் மார்பை அறுத்தெறிந்த பெண் நங்கேலி
மலையாள மொழியில் வெளியாகி இருக்கி இருக்கும் திரைப்படம் பத்தொன்பதாம் நுாற்றாண்டு திரைப்படத்தில் மார்பக வரிக்கு எதிராக குரல் கொடுத்த நங்கேலி பற்றிய கதாபாத்திரத்தை தற்போது பார்க்கலாம்.
அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறை
150 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பல்வேறு இடங்களில் சாதிக் கொடுமை தலைவரித்து ஆடியது. அடக்குமுறையில் ஈடுபட்ட அதிகார வர்க்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்களை சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.
குறிப்பாக கேரளா மாநிலம் திருவாங்கூர் சமஸ்தானம் மார்பக வரி என்ற கொடூர சட்டத்தை கொண்டு வந்தது. உயர்வகுப்பினரை தவிர மற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் அனைவரும் தங்கள் மார்பகத்தின் அளவிற்கு ஏற்பவும்,
அதை மறைக்கவும் வரி செலுத்த வேண்டும். மார்பை மறைக்க வேண்டாம் என்றால் வரி செலுத்த வேண்டாம் என்பதே அந்த கொடூர சட்டத்தின் பின்னணி.
இந்த மார்பக வரி சட்டத்தை எதிர்த்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நங்கேலி என்ற நடுத்தர வயது பெண் தனி ஆளாக குரல் கொடுத்தால்.
இதனால் ஆத்திரமடைந்த அரசு. நங்கேலியின் குரலை ஒடுக்க, அவள் மட்டும் இரட்டை வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
உயிரை தியாகம் செய்த நங்கேலி
இதற்கெல்லாம் அஞ்சாத நங்கேலி, தான் வரி செலுத்த முடியாது என்ற முடிவில் உறுதியாக இருந்தாள். ஒருநாள் நங்கேலியின் வீட்டுக்கு வந்த அதிகாரிகள் வரி கேட்டு மிரட்டியுள்ளனர்.
அவர்களை கோபத்துடன் எதிர்த்து பேசிய நங்கேலியை அதிகாரிகள் ஆட்களை ஏவி அடித்து துன்புறுத்தி மானபங்கப்படுத்தியுள்ளனர்.
அவமானத்தை தாங்கி கொள்ள முடியாத நங்கேலி, தன்னிடம் இருந்த கூர்மையான கத்தியை எடுத்து, மார்பகம் இருந்தா தான வரி கேட்பாய், நீயே எடுத்துச் செல் எனக் கூறி அதிகாரிகள் முன் தான் அணிந்திருந்த மேலாடையை அவிழ்த்து, தனது மார்பகங்களை அறுத்து தன் முன்னே இருந்த வாழை இலையில் வைத்தால், இதைக்கண்டு அனைவரும் உறைந்து போயினர்.
வலியால் துடிதுடித்த நங்கேலி, ரத்த வெள்ளத்தில், அங்கேயே சரிந்து விழந்து உயிரிழந்தார். மார்பக வரிக்கு எதிராக சிங்கப்பெண் போல் தனி ஆளாக குரல் கொடுத்து தன் உயிரை இழந்த நங்கேலியின் தியாகத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த அரசாங்கம் உடனடியாக இந்த சட்டத்தை நீக்க உத்தரவிட்டது.
வரலாற்று திரைப்படம்
இத்தகைய வரலாற்று நிகழ்வை தத்ரூபமாக திரையில் கொண்டு வந்துள்ள படம் தான் “பத்தொன்பதாம் நுாற்றாண்டு”. மலையாளத்தில் வெளியாகியுள்ள திரைப்படத்தில் நடிகை கயாடு லோகர் நடித்திருக்கிறார்.
இதில் வேலாயுத பணிக்கர் என்கிற போராளி கதாபாத்திரத்தில் நடிகர் சிஜு வில்சன் நடித்து இருக்கிறார். வினயன் இப்படத்தை இயக்கியிருந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீசாகி வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது ஓடிடி தளத்தில் ரிலீசான பின்னர் தான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இப்படத்தில் நங்கேலியாக நடித்துள்ள கயாடு லோகர் மார்பகத்தை அறுத்து எறியும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருள் ஆகி உள்ளது.