நந்திகிராம் சென்றது ஏன்? பாஜகவின் புகாருக்கு மம்தா பேனர்ஜி பதில்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் நந்திகிராம் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்க மாநிலத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் திடீரென அங்கு வந்தார்.
அந்த சமயத்தில் பாஜகவினருக்கும், மம்தா பானர்ஜி தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது. மேற்கு வங்கத்தில் இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நந்திகிராம் வாக்குச்சாவடிக்கு தான் ஏன் வந்தேன் என்பதற்கான விளக்கத்தை மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
அதில், ''நந்திகிராம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குவிந்திருப்பதாக தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்தேன்.

வெளி மாநிலங்களைச் சேர்ந்த குண்டர்கள் கைத்துப்பாக்கிகளுடன் அங்கு இருந்தனர். அவர்கள் பிற மொழிகளைப் பேசினர். அவர்கள் பாஜக கட்சியைச் சேர்ந்த பிற மாநிலக் குண்டர்களாக இருப்பார்கள்.
வாக்குச்சாவடியில் உள்ளூர் மக்களை அனுமதிக்காதது குறித்து ஆளுநரிடம் புகாரளித்தேன். விரைந்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும்'' என்று கூறினார்.