அவமானப்படுத்துவது சரியல்ல.... - பாலகிருஷ்ணாவை விளாசிய நாகசைதன்யா..!
நடிகர் நாக சைதன்யா, பிரபல நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹீரோயினுடன் மது அருந்திய பாலகிருஷ்ணா
தெலுங்கு திரையுலகில் பிரபல நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘வீரசிம்ம ரெட்டி’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படம் தான் பாலகிருஷ்ணா படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாகும்.
இதனையடுத்து, இப்படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்கு நேற்று முன்தினம் படக்குழுவினர் விழாவிற்கு ஏற்பாடு செய்தனர். வீரசிம்ம ரெட்டியும், படத்தின் ஹீரோயின் ஹனி ரோஸ் மற்றும் படக்குழுவினர் இந்த வெற்றி விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த வெற்றி விழாவில், பாலகிருஷ்ணாவும், ஹீரோயின் ஹனி ரோஸும் இரண்டு பேரும் கைகளை கோர்த்து கொண்டு ரொமான்டிக்கான முறையில் மது குடிப்பது போன்ற புகைப்படங்களும், போதையில் தள்ளாடிய படக்குழுவினரின் புகைப்படங்களும் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலகிருஷ்ணாவை விளாசிய நாகசைதன்யா
இந்நிலையில், நடிகர் நாக சைதன்யா, பிரபல நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘வீரசிம்ம ரெட்டி’ பட வெற்றி விழாவில் நடிகர் பாலகிருஷ்ணா பேசுகையில், என் அப்பா என்டி ராமாராவ் காலத்தில் அந்த ரங்கா ராவ், இந்த ரங்கா ராவ், அக்கினேனி தொக்கினேனி என்று சிலர் இருந்தார்கள் என்று விமர்சனம் செய்தார்.
பால கிருஷ்ணாவின் இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் பலரும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இது குறித்து நடிகர் நாகார்ஜூனாவின் மகன்களான நாக சைதன்யாவும், அகில் அக்கினேனியும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து நாகசைதன்யா அந்த பதிவில், என்.டி. ராமா ராவ் காரு, அக்கினேனி நாகேஷ்வர ராவ் காரு மற்றும் எஸ்.வி. ரங்கா ராவ் காரு ஆகியோரின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு தெலுங்கு சினிமாவின் பெருமையாகவும் தூண்களாகவும் உள்ளது. அவர்களை அவமானப்படுத்துவது நம்மை நாமே அவமானப்படுத்துவதற்கு சமம் என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் நாகசைதன்யாவிற்கு ஆதரவு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
— chaitanya akkineni (@chay_akkineni) January 24, 2023
பரபரப்பு சம்பவம்: வெள்ளை மாளிகை விருந்தில் துப்பாக்கிச் சூடு - இலக்கு வைக்கப்பட்ட ஜனாதிபதி ட்ரம்ப்..! IBC Tamil
30 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க திட்டம் IBC Tamil
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan