ஹீரோயினுடன் கைகோர்த்து மது அருந்திய பிரபல நடிகர்... - வைரல் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்...!

Nandamuri Balakrishna
By Nandhini Jan 23, 2023 12:09 PM GMT
Report

வெற்றி விழாவில் ஹீரோயினுடன் கைகோர்த்து மது அருந்திய பிரபல நடிகரின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹீரோயினுடன் மது அருந்திய பிரபல நடிகர்

தெலுங்கு திரையுலகில் பிரபல நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘வீரசிம்ம ரெட்டி’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படம் தான் பாலகிருஷ்ணா படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாகும்.

இதனையடுத்து, இப்படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்கு நேற்று படக்குழுவினர் விழாவிற்கு ஏற்பாடு செய்தனர். வீரசிம்ம ரெட்டியும், படத்தின் ஹீரோயின் ஹனி ரோஸ் மற்றும் படக்குழுவினர் இந்த வெற்றி விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த வெற்றி விழாவில், பாலகிருஷ்ணாவும், ஹீரோயின் ஹனி ரோஸும் இரண்டு பேரும் கைகளை கோர்த்து கொண்டு ரொமான்டிக்கான முறையில் மது குடிப்பது போன்ற புகைப்படங்களும், போதையில் தள்ளாடிய படக்குழுவினரின் புகைப்படங்களும் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    

nandamuri-balakrishna-drank-alcohol-heroine