அது நம்ம புத்தாண்டே கிடையாது - திடீரென வீடியோ வெளியிட்ட நமீதா

Namitha Viral Video
By Sumathi Apr 12, 2023 11:01 AM GMT
Report

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா.

நடிகை நமீதா

தமிழில் அஜித், விஜய், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது கவர்ச்சி நடிப்பால் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஆக்கினார். இந்நிலையில் நமீதாவிற்கான பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது.

அது நம்ம புத்தாண்டே கிடையாது - திடீரென வீடியோ வெளியிட்ட நமீதா | Namitha Video Goes Viral

இதையடுத்து விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவர் தனது காதலர் வீரேந்திராவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.தொடர்ந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திடீரென வீடியோ வெளியிட்டுள்ள நமீதா,

புத்தாண்டு வாழ்த்து

டிசம்பர் 31ஆம் தேதி இரவு நேரத்தில் நாம் நண்பர்கள் உறவினர்களுடன் சேர்ந்து பார்ட்டி வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடுகிறோம். அது நமது கலாச்சாரம் அல்ல. நாம் இந்தியர்கள் நமது இந்திய நாட்டில் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டுதான் நமது தமிழ் புத்தாண்டு. ன்னும் இரண்டு நாள்தான் இருக்கிறது.

தமிழ் புத்தாண்டு தினத்தன்று நாம் காலையிலேயே எழுந்து குளித்து விட்டு கோவிலுக்கு போய் இறைவனின் ஆசியை பெற வேண்டும். வீட்டில் பெற்றோர்கள், மூத்தவர்களின் ஆசியை பெற வேண்டும். புத்தாண்டு தினத்தன்று நாள் முழுவதும் குடும்பத்தோடும் உறவினர்களோடும் இணைந்து

தமிழ் புத்தாண்டினை கொண்டாடுங்கள் அதுதான் நமது கலாச்சாரம், பாரம்பரியம். எல்லோரும் ஏப்ரல் 14 ஆம் தமிழ் புத்தாண்டினை மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடுங்கள் எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வணக்கம் எனத் தெரிவித்துள்ளார்.