‘‘மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போடுங்க’’ : வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நமீதா பிரசாரம்

actress bjp Vanathi Srinivasan namitha
By Jon Mar 26, 2021 12:13 PM GMT
Report

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து வாக்கு சேகரித்தார் நடிகை நமீதா . கோவை காந்திபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

அப்பொழுது பேசிய நமீதா, வானதி சீனிவாசன் எஉங்களுக்காக சேவை செய்து வருகிறார், கடந்த ஐந்து வருடங்களில் இந்த தொகுதி மக்கள் 18 ஆயிரம் பேருக்கு மோடியின் திட்டங்களை கொண்டு சேர்த்துள்ளார்.

‘‘மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போடுங்க’’ : வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நமீதா பிரசாரம் | Namitha Vanathi Srinivasan Vote People Bjp

மேலும், பெண் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்விக்கு வருடம் பத்தாயிரம் ரூபாய் வழங்கி உள்ளார், அது மட்டுமின்றி அனைத்து விழாக்களுக்கும் குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி உதவி வருகிறார். அதனால் இங்கேயே பிறந்து உங்களுக்காக சேவை புரியும் வானதி சீனிவாசன் அக்காவிற்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்.

வாக்கு சேகரிக்கும் போது அவரது பிரபல வசனமான "மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போடுங்க கோவையில் தாமரை மலரும் தமிழ்நாடு வளரும்" என்று தெரிவித்த நமீதா, பிரச்சாரத்திற்கு முன்னதாக அப்பகுதியில் உள்ள இளைஞர்களுடன் இணைந்து நடனமும் ஆடினார்.