நமீதா மாரிமுத்து வெளியிட்ட வீடியோவால் குவியும் பாராட்டு - அப்படி என்ன செய்தார்?

Viral Video Namitha Marimuthu
By Thahir Oct 20, 2021 08:09 AM GMT
Report

நமீதா மாரிமுத்து தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவால் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் நடந்து வருகிறது. அக்டோபர் 3ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதில் நமீதா மாரிமுத்து என்ற திருநங்கையும் ஒருவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை கலந்து கொள்வது இதுவே முதல்முறை.

நிகழ்ச்சியில் அனைவரும் தங்களை பற்றி அறிமுகம் செய்து வந்தனர். அப்போது நமீதா மாரிமுத்து தனது வாழ்க்கையில் தான் பெற்ற கஷ்டங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதை கேட்டு அந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் கண்கலங்கினர். அடுத்த நாளே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர் தாமரைச் செல்வியுடன் சண்டை ஏற்பட்டது.

ஆனால், அன்றைய தினவே இருவரும் சமாதானம் ஆகினர். ஆனால், அடுத்த நாள் நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து இடம்பெறவில்லை.

இதுகுறித்து பிக்பாஸ் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், உடல்நலக்குறைவு காரணமாக நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின் அவர் தற்போது முதல்முறையாக வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் சாலை ஓரத்தில் இருக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதை பார்த்த பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றன.