பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து வெளியிட்ட முதல் வீடியோ இதுதான் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 5ல் இருந்து முதல் ஆளாக வெளியேறிய திருநங்கை நமீதா மாரிமுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக ஐந்தாவது சீசனில் திருநங்கை நமீதா மாறிமுத்து போட்டியாளர்ராக கலந்து கொண்டார். அவர் மற்ற போட்டியாளர்களுக்கு பெரிய போட்டியாக இருப்பார் என எதிர்பார்த்த நிலையில் திடீரென உடல்நலகுறைவு காரணமாக முதல் வாரமே வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதுதொடர்பான காட்சிகள் இதுவரை ஒளிபரப்பப்படவில்லை. 

அதன்பிறகு அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என செய்தி மட்டும் வந்தது. மேலும் நமீதா மாரிமுத்து மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக வர இருக்கிறார் எனவும் தகவல் பரவியது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து திரும்பியிருக்கும் நமீதா மாரிமுத்து வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில் எழை குழந்தைகளுக்கு அவர் துணி வாங்கி கொடுத்து இருக்கிறார். அதை பார்த்த இணையவாசிகள் அவரை பாராட்டி வருகின்றனர்.

 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்